Sunday, December 21, 2008

டேய்!...முடிவா என்ன தான்டா சொல்ல வர்றீங்க....ஏன்டா கொல்றீங்க!!!!!

கீழே விவரிக்கப்பட்டுள்ளது ஒரு உண்மைச் சம்பவம்(சத்த்த்த்த்தியமாக) . ஐயாவுக்கும் ஒரு ஆட்டோகாரருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பிசகின்றி தர முயற்சி செய்துள்ளேன்.இது சென்னைக்காரர்களுக்கோ அல்லது சென்னையில் சில ஆண்டுகளேனும் வாசம் செய்தவர்களுக்கொ மட்டுமெ விளங்கக்கூடிய நிகழ்வு என்பதை முன்னரே தெரிவிக்க விழைகிறேன்.
ஆட்டோ என்பது தமிழக மக்கள் வாழ்க்கையில் குறிப்பாக சென்னைவாசிகளின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது.கிட்டதட்ட பொங்கலும் கெட்டிச் சட்னியும் போல. இரட்டைக்கிளவி என்று கூட சொல்லலாம்.ஆட்டோக்களில் பச்சைப் பட்டி போட்டிருந்தால் அது CNG ல் ஓடுகிறது என்று அர்த்தம். அதில் பாதிக்குபாதி பேரம் பேசலாம். ஏனெனில் CNG ஆட்டோக்கள் mileage குண்டக்க மண்டக்க ஜாஸ்தியா குடுக்கும்.அதே கறுப்பு பட்டி போட்டிருந்தால் அது City Limit க்கு வெளியே இருந்து வருகிறது என்று அர்த்தம்.அதிலேயும் கொஞ்சம் பேரம் பேசலாம்.எந்த பட்டியும் போட‌வில்லை எனில் அது local ஆட்டோ.அவய்ங்கள்ட்ட நம்ம பருப்பு வேகாது.அதுவும் போக அந்த ஆட்டோல ஏறினா கால ஆட்டிகிட்டே தான் உட்காறனும்.இல்லயினா டவுசரையும் கழட்டிகிட்டு தான் விடுவாய்ங்க.

2007 Nov கடைசீ வாரத்துல ஒருநாள் மதியம் 2:00 மணிக்கு அண்ணனுக்கு US VISA Stamping க்கு appointment இருந்தது.
12:30 க்கு கிளம்பனும்னு யோசிச்சு வழக்கம் போல அரை மணிநேரம் lateஆ கிளம்பினேன்.நான் தங்கியிருந்தது திருவான்மியுரில். திருவான்மியூர் RTO office signal க்கு பக்கத்துல ஆட்டோக்காக wait பண்ணிக்கிட்டிருந்தேன். வர்றவன் பூராம் 150 ரூபா கேட்டாய்ங்க...நான் 100 ரூபாய்க்கு மேல தர்றதா இல்ல.இதுல வயசானவய்ங்களா இருந்தா மெதுவா ஓட்டுவாய்ங்க .நமக்கு வேற late ஆகுதுங்கிறதால சின்னப்பயலுக ஓட்ற வண்டியாபாத்து ஏறணும்னு நினைச்சுகிட்டுருந்தேன்.கடைசியா ஒரு ஆட்டோவ புடிச்சேன்.பச்சை பட்டி போட்டது...ஓட்ற ஆளும் கொஞ்ச வயசு ஆளா இருந்தான்.நம்மளப் பாத்து அவனாவே வண்டிய நிப்பாட்னான்.
' எங்க சார் போகணும் ..? '

' American Consulate போகணுங்க'

' போலாம் சார்....எங்க சார் இருக்கு அந்த college? '

' கிழிஞ்சுது போ...college இல்லங்க......consulate.... அண்ணா மேம்பாலம் தெரியுமா ? ஜெமினி......'

' ஆ...தெரியும் சார்....150 ரூபா குடுங்க...'

'150 எல்லாம் தரமுடியாது ...80 ரூபா வாங்கிக்கிறியளா?....'

' இல்ல சார்...120 குடுங்க......'

நேரமாகிக் கொண்டிருந்ததால் வேறு வழியின்றி ஏறி அமர்ந்தேன்.வண்டி கொஞ்சம் புது வண்டி தான்...ஆனாலும் எனது எதிர்பார்புக்கு நேர்மாறாக ஆமை வேகத்தில் செலுத்தினார் மதிப்பிற்குரிய ஓட்டுனர்.

'அண்ணேன் கொஞ்சம் வேகமாப் போங்க...2:00 மணிக்கு அங்க இருக்கணும்...'

' போயிடலாம் சார்...'

'ரேடியோ இருந்தா போடுங்களே...'

'ரிப்பேரா இருக்கு சார்.....'

வண்டி இப்போது மருந்தீசுவரர் கோவிலருகில் சென்றுகொண்டுள்ள்து.
பொதுவாக அட்டோகாரர்கள் உள்ளதிலேயே சுருக்கமான வழியில் தான் செல்வார்கள் என்றாலும் U.s.Consulate தெரியாத ஆட்டோக்காரர் என்பதால் கீழ்வரும் கேள்வியை கேட்க வேண்டியதயிற்று...

'எப்டி போறீங்க..? '

' என்ன சார்'

' எந்த வழியா போறீங்கன்னேன்....'

' இப்டியே Tidel park road அ புடிச்சு அண்ணா university வழியா சைதாப்பேட்ட போயி....அப்டியே mt.Road அ புடிச்சுட்டா அப்டியே ஜெமினி போயிடலாம் சார்...'

' வெளங்குச்சு போ....ஏன் அப்டியே விழுப்புரம் போயி திண்டிவனம் போயி போகவேண்டி தானே...அய்யா...மயிலாப்பூர் வழியா போகணும்யா.....'

' மயிலாப்பூர் எப்டி சார் போறது?...'

' யோவ் எந்த ஊருயா நீ?...'

' local தான் சார்'

' சும்மா பொய் சொல்லாதயா...'

' அய்ய.. நெஜமா தான் சார்....தரமணி சார் நானு....'

'எத்தன வருஷமா ஆட்டோ ஓட்றீங்க?'

' மூணு மாசமா ஓட்டினுகுறேன் சார்....மயிலாப்பூர் எப்டி சார் போறது?...'

'மலர் hospital தெரியுமா?..'

' தெரியும் சார்...'

'அது வரைக்கும் போயா அப்பறம் சொல்றேன்...'

consulate க்கு mobile எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்பதால் வீட்டிலேயே விட்டு விட்டேன்.watch கட்டும் பழக்கம் வேறு இல்லாததால் மணி என்ன இருக்கும் என்று கூட தெரியவில்லை.அந்த தெங்கனமும் watch கட்ட‌வில்லை.
அருகில் டூவீலரில் செல்பவர்கள் கையைப் பார்த்தால் ஒரு watch 1:45 காட்டுகிறது...இன்னொன்றில் 2:00 ஆகிற‌து....மற்றொன்றில் 2:10....எல்லாம் சில விநாடிகளுக்குள்.....

'மலர் hospital க்கு அந்தாண்ட‌ எப்டி சார் போணும்?..'

'நேரா திரு.வி.க பாலம் வழியா போங்க....சொல்றேன்....'

திரு.வி.க பாலம் தாண்டியதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அண்ணன் நெடுநாள் மயிலை வாசி என்பதாலும்..தம்பி கபாலிக்கு அடுத்தபடியாக மயிலாபூரின் சந்துபொந்துகள் எல்லாம் தெரிந்து வைத்துள்ளவர் என்பதாலும் பாலம் தாண்டிய சில மணித்துளிகளுக்குள் கபாலி கோயில் தெப்பக்குளம் அருகே வந்தாகிவிட்டது.
( மயிலை பற்றி ஒரு சிறிய பெட்டிச் செய்தி.பேயாழ்வார் பிறந்த வீடு இன்னும் அங்கே உள்ளது.வாயிலார் நாயனார் பிறந்ததும் இங்கே தான்.வள்ளுவரும் கூட மயிலையை சேர்ந்தவர் என்னும் ஒரு கூற்று உள்ளது.)

'staright ஆ போயி அந்த road அ புடிங்க..அதான் R.K.Mutt road....'

வண்டி LUZ Corner signal லில் வந்து நின்றது.அது வரை அமைதியாக இருந்த மிளகுரசம் மீண்டும் திருவாய் மலர்ந்தான்...

'..ஓஹோ....அப்ப இதான் தேனாம்பேட்ட Signal ஆ சார்...?..."

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசி சொல்வது போல் ' அன்னிக்கு எனக்கு கோபம் கோபமா வந்தது...இப்பொ நெனச்சா சிரிப்பு தான் வருது...'


' யோவ் இது LUZ Corner யா...சின்ன புள்ளய கேட்டா கூட சொல்லும்...போயும் போயும் உன்னொட வண்டீல வந்து எறுனேன் பாரு....என்னய சொல்லணும்யா....'

Signal தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு வள்ளுவர் சிலை வரும்..அதனருகே சென்று கொண்டிருந்தது வண்டி.

'..சார்...இதென்ன ஏரியா சார்...ட்ரிப்லிகேணியா?...'
எனக்கு B.P எகிறி தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
' யோவ் கடுப்பேத்தாதயா....பேசாம ஓட்டுயா....விவேகானந்தா college தெரியுமாயா...?.'

' தெரியாது சார் '...

' உனக்கு என்னதான் தெரியும்?....இந்த left எடுயா....இந்த left தான்யா......'

அதற்கு மேல் அவனோடு தொடர்ந்து பயணிக்க எனக்கு துணிவில்லை.விவேகானந்தா college வந்ததும் அங்கே இறங்கி வேறு ஆட்டோவில் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.


'அந்த ஆட்டோ stand கிட்ட வண்டிய கொஞ்சம் நிப்பாட்டுங்க.....'

'எதுக்கு சார்..?...'

'எப்டி போறதுன்னு மறந்துட்டேன்...அந்த ஆட்டோகாரர்ட்ட கேட்டுக்கலாம்....'

வண்டியை நிறுத்தினான். அங்கே இருந்த வேறொரு ஆட்டோக்காரரிடம் American Consulate தெரியுமா என்று கேட்டேன்.

' தெரியும் சார்....ஜெமினியாண்ட...'

'எவளவு ரூபா....'

' முப்பது ரூபா குடு சார்....'

இப்போது அந்த ஈரவெங்காயத்திடம் சென்று 100ரூபாய் கொடுத்தேன்....

' இதுக்குமேல தாங்க முடியாது குருநாதாஆஆ....80 ரூபா எடுத்துகிட்டு....20 ரூபா சில்ற குடு....'

' சார்...ஏன் சார்...வா சார்...நம்ப வண்டிலயே போலாம் சார்.......'

'ஐயா சாமீ...ஆள விடு.....உங்கூட வந்தவரைக்கும் போதும்...சில்றய குடு எனக்கு late ஆகுது...'


' இன்னா சார்..இம்மாந்தூரம் வந்துட்டு...80 ருபா தான் தர்றீங்கோ.....'


' யோவ் நீ மிச்சமே தர வேணாம் யா...100 ருபாயையும் வச்சிக்க... '

' அந்த இன்னொரு ஆட்டோவில் என்று ஏறினேன்.அந்தக் கொடுக்காபுளி மீண்டும் முகத்தை சுண்டிக்கொண்டு என்னருகே வந்தான்....எதேனும் சண்டை போடுவான்..இல்லையெனில் மேற்கொண்டு 20 ரூபாய் கேட்பான் என எண்ணினேன்.....கேட்டாம் பாருங்க ஒரு கேள்வி.......

' சார்..இதெல்லாம் நல்லாகுதா சார்....நீ பாட்னு என்ன எங்கயோ இட்டாந்து வுட்டுப்போறியே...நான் இப்பொ எப்டி சார் வூட்டுகுப் போறது....'னான்...

'எப்டியோ போயிதொலையா...'

' அண்ணேன்...வண்டிய எடுங்கண்ணேன்....'

ஒரு வழியாக 2:15 க்கு போய்சேர்ந்தேன்...ஒரளவிற்கு சுமாரான queue இருந்தது...
Actual ஆ அண்ண‌னோட computer Knowledge க்கு local post office ல கூட stamp குடுக்க மாட்டாங்கங்கறதால பல பொய்களைச் சொல்லி Stamping வாங்கீட்டு 4:30 மணி சுமாருக்கு வெளியேறினேன்.

வெளியே வந்து ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்று மீண்டும் ஒரு இரட்டைக்கிளவியான இஞ்சி டீயும் GF Kings சும் பருகி விடைபெற்றேன்..

வாழ்க பாரதம்!!! வெல்க தமிழ்!!!